நண்பனின் மனைவிக்கு காதல் வலை விரித்த சக நண்பன் : உயிர் நண்பனின் உயிரை எடுக்க துணிந்த நண்பன் கைது!!

20 July 2021, 12:36 pm
Friend Murder Attempt -Updatenews360
Quick Share

திருப்பூர் : மனைவியிடம் போனில் பேசியதாக கூறி நண்பரை கத்தியால் தாக்கிய சக நண்பனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் கோவில் வழியை சேர்ந்தவர் மணிகண்டன். பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்தவர் சசிக்குமார். இருவரும் நண்பர்கள். இந்நிலையில் மணிகண்டன், சசிக்குமார் மனைவியிடம் அடிக்கடி போனில் பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து சசிக்குமார் பலமுறை எச்சரித்தும் மணிகண்டன் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருப்பூர் – தென்னம்பாளையம் பகுதியில், இதுதொடர்பாக சசிக்குமார், மணிகண்டனிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சசிக்குமார் மணிகண்டனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த மணிகண்டன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சசிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 240

0

0