குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை: மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி

14 June 2021, 11:24 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடிபோதையில் பெயிண்டர்களுக்குள் ஏற்பட்ட தகராறில்
ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் அருகே உள்ள அச்ச ராஜக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்பையா, கங்காதரன், சிரஞ்சீவி இவரது சகோதரர் முருகேசன், இவர்கள் நால்வரும் பெயிண்டர் தொழில் செய்து வருகின்றனர். இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் வேலைக்கு செல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் மது அருந்தியுள்ளனர். மது குடிக்கும் போது சிரஞ்சீவி மற்றும் முருகேசன் ஆகியோருக்கும் கருப்பையா, கங்காதரன் இடையே சம்பளம் பிரித்து கொடுப்பதில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையில் சிரஞ்சீவி, கருப்பையா மற்றும் கங்காதரனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கருப்பையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கங்காதரன் கத்தி குத்து காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த தாலுகா காவல் நிலைய போலீஸார் சிரஞ்சீவி மற்றும் அவரது சகோதரர் முருகேசனே தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் இன்று திறந்த நிலையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்ச ராஜக்காபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 187

0

0