கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு வரும் 25ம் தேதி முதல் ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

23 November 2020, 12:46 pm
southern railway - updatenews360
Quick Share

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு 25ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருப்பதால் மீண்டும் ரயில் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கொரோனா காரணமாக நாகர்கோவில் வரை மட்டுமே இயக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சி இன்டர்சிட்டி ரயில் மீண்டும் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது. இதேபோல பல்வேறு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு செல்லும் நிஜாமுதீன் சூப்பர் பாஸ்ட் ரெயில் 25ம் தேதி முதல் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,

கன்னியாகுமரி- டெல்லி நிஜாமுதீன் (ரெயில் எண் 06011) செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயில் 25ம் தேதி முதல் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. இதே போல டெல்லி நிஜாமுதீன்- கன்னியாகுமரி (ரெயில் எண் 06012) வரும் சூப்பர் பாஸ்ட் ரயில் டெல்லியில் இருந்து 28ம் தேதி முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.20 மணிக்கு புறப்படும். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0