கர்நாடகத்தில் கனமழை எதிரொலி: தமிழகத்திற்கு 160 டி.எம்.சி. காவிரி நீர் திறப்பு…!!

5 November 2020, 4:03 pm
tn water - updatenews360
Quick Share

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தமிழகத்திற்கு 160 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். ஆனால் கடந்த 1ம் தேதி வரை தமிழகத்திற்கு கர்நாடகத்தில் இருந்து 160 டி.எம்.சி. நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழைவு பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள நீர் அளவீட்டு மையத்தில் இது பதிவாகியுள்ளது.

நடப்பு நவம்பர் மாதத்தில் 13.76 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் அது கடந்த மாதமே திறந்து விடப்பட்டுள்ளதால், கர்நாடக அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது முதல் 2021 மே மாதம் வரை 17 டி.எம்.சி. நீர் கர்நாடகம் வழங்க வேண்டும்.

தொடர்ந்து லேசான மழை பெய்து வருவதால், இந்த நீரை திறந்து விடுவதில் கர்நாடகத்திற்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

Views: - 14

0

0