வளர்த்த காளை தோற்றதால் விரக்தியடைந்த இளம்பெண் : அமைச்சர் அழைத்தும் பரிசு வாங்க மறுப்பு!!

Author: Udhayakumar Raman
14 January 2022, 8:45 pm
Quick Share

மதுரை: தான் வளர்த்த காளை பிடிமாடாக ஆனதால் அமைச்சர் மூர்த்தி சிறப்புப் பரிசு வழங்க முன்வந்தும் அதனை வாங்க இளம்பெண் மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் யோகதர்ஷினி. இவர் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். ஜல்லிக்கட்டு தடைக்குப் பிறகு நடைபெற்ற போராட்டம்தான் ஜல்லிக்கட்டு காளைகளின் மீது இவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையும், அண்ணனும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பில் ஈடுபட்டாலும், மிக மிக பின்னால்தான் யோகதர்ஷினிக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளை அவிழ்ப்பதை பெருமையாகக் கருதுகிறார்.

கடந்த முறை இதேபோன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளை களமிறங்கியபோது, தனக்கு விழாக் குழுவினர் வழங்க அழைத்தபோது, அதனைப் பெற மறுத்து காளையோடு நடையைக் கட்டினார். அப்போது வருவாய்த்துறை அமைச்சர், மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வழங்குவதற்காக அழைத்தபோதும் அதனை ஏற்க மறுத்தார். அதேபோன்று இந்த முறை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளையை களமிறக்கினார்.

அது வீரர்களால் பிடிக்கப்பட்டு பிடிமாடாக ஆனபோதும்கூட, விழாக் குழுவினர் யோகதர்ஷினிக்கு சிறப்பு வழங்க அழைத்தபோது ‘கெத்து’ காட்டினார். இந்த முறை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மைக்கில் சிறுமி யோகதர்ஷினியை அழைத்தபோதும் அதை சட்டை செய்யாமல் தனது காளையை அழைத்துக் கொண்டு நடையைக் கட்டினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 262

0

0