மது வாங்கி தராததால் விரக்தி : GLASSMATEஐ கட்டையால் அடித்து கொலை செய்த சக நண்பர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2022, 2:27 pm

கோவை : மது வாங்கி தராததனால் முன் விரோதம் ஏற்பட்டு நண்பரையே கொலை செய்த உடனிருந்த நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் வசிக்கும் கார்த்திக், ரஞ்சித் இருவரும் தியாகராஜன் என்பவருடன் மது அருந்துவது வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கம் போல கார்த்திக் , ரஞ்சித் மது வாங்கி தரும்படி தியாகராஜனிடம் கேட்டிருந்த நிலையில் அவர் வாங்கி தர மறுத்திருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

இந்த நிலையில் தனியாக நின்றிருந் தியாகராஜனை மது குடிக்க அழைத்து செல்வதாக தெரிவித்து பி.என்.புதூர் அழைத்து சென்று கட்டையால் அடித்தனர். இதனால் காயமடைந்து சம்பவ இடத்திலேயே தியாகராஜன் உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் தியாகராஜன் உடலை மீட்டு விசாரணை செய்த நிலையில், கார்த்திக், ரஞ்சித் அடிக்கடி இவருடன் மது அருந்துவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்தி விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!