காட்டுக்குள் திருமணமான பெண்ணுடன் உல்லாசம் : 21 வயது இளைஞரை கொலை செய்த மர்மகும்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 3:51 pm
youth Murder -Updatenews360
Quick Share

சென்னை : இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பள்ளிகரணை அடுத்த நன்மங்கலம், அருள்முருகன் நகர் ஏரியை ஒட்டிய பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக பள்ளிகரணை போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலின் பேரில் பள்ளிகரணை போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்த நபர் விக்கி (வயது 21), என்பது தெரியவந்தது. முதற்கட்ட தகவலின் படி முறையற்ற உறவின் காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 564

1

0