ஆட்டம் ஆரம்பம்… தாராபுரத்தில் பாஜக தலைவர் முருகன் பேனர் கிழிப்பு…போலீசார் குவிப்பு!!

4 May 2021, 11:27 am
Murugan Banner -Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரத்தில் வாக்களித்தவர்கள் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக மாநில தலைவரும் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான எல். முருகன் தாமரை சின்னத்தில் நிறுத்தப்பட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழியைவிட 1,393 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியை அடைந்தார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி! நன்றி!என தெரிவித்து அண்ணா சிலை அருகே அதிமுக நகர செயலாளர் டி.டி. கே.காமராஜ் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.

அதனருகே திமுகவினரும் நன்றி அறிவிப்பு பேனர் வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று முருகனுக்காக வைக்கப்பட்ட பேனரை அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் வேண்டுமென்றே எல். முருகனின் முகத்தில் மார்க் போட்டவாறு பேனரை கிழித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அண்ணா சிலை அருகே ஒன்று கூடினர். தகவல் அறிந்த போலீசார், குவிந்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. அதே சமயம் தேர்தல் ஆணையத்தால் கட்டி வைக்கப்பட்ட அதிமுகவின் 40 அடி கட்சியின் கழக கொடி கம்பத்தை மாற்றும் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுடைய பேனர் கிழிப்பு தாராபுரத்தில் பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 207

0

0