காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இலவச முகக்கவசம் மற்றும் கபசுரகுடிநீர் : அறக்கட்டளை சார்பாக வழங்கல்!!

2 October 2020, 11:23 am
Free Mask - updatenews360
Quick Share

கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கலாம் அறக்கட்டளை, மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பிரல், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும்,முககவசங்கள், கபசுரகுடிநீர் வழங்கபட்டது.

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காளப்பட்டி பகுதியில், கலாம் அறக்கட்டளையுடன் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் மகாத்மா காந்தியின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தியின் நினைவுகள் பற்றியும் சுதந்திரப் போராட்ட யாகங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் கைகளை அடிக்கடி கழுவுவது,முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்ப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மூன்று லேயர் கொண்ட இலவச முகக்கவசங்கள் வழங்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் இனிப்புகளை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

Views: - 44

0

0