‘நியாபகம் இருக்கா’… தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் விடுமுறை!!

1 October 2020, 1:17 pm
Corona Tasmac - Updatenews360
Quick Share

சென்னை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்டத் தியாகியும், தேசத் தந்தையுமான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அக்.,2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளை, வன்முறையற்ற தினமாக கொண்டாடும் விதமாக, காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நாளை காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல் மற்றும் கிளப்புகளில் உள்ள மதுபான பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து குடிமகன்கள் இன்றே தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைக்க முயல்வார்கள் என்பதால், டாஸ்மாக்கின் வருமானம் இன்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.