கோவையில் இனி இந்த பார்க் செயல்படாது : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!!

15 April 2021, 3:30 pm
cbe Gandhi Park Closed -Updatenews360
Quick Share

கோவை : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை காந்தி பார்க் மூடப்பட்டது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 24-வது வார்டு பகுதியில், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான காந்தி பார்க் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் பொது முடக்கத்தின் போது மூடப்பட்ட காந்தி பார்க் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.

தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பார்க் நேற்று மீண்டும் மூடப்பட்டது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் விடுத்துள்ள உத்தரவில், ‘மறுஉத்தரவு வரும்வரை காந்தி பார்க் தற்காலிகமாக மூடப்படுகிறது.’ என்று தெரிவித்துள்ளார்

Views: - 21

0

0