காவலரின் பைக்கையே திருடிய பலே கும்பல் : கைவரிசை காட்டிய களவாணிகளின் சிசிடிவி காட்சி வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2022, 4:10 pm
Police Bike Theft -Updatenews360
Quick Share

கோவை : வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த தலைமைக் காவலரின் பைக்கை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சொக்கம்புதூர் பகுதியில் தலைமை காவலர் செந்தில் வசித்து வருகிறார். நேற்று காலை அவரது வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர கார் வழக்கமாக நிறுத்தப்படுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். பின்பு அதிகாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. வீட்டில் வெளியே வந்து வாகனத்தை எடுக்க வந்த தலைமை காவலர் செந்தில் வந்துள்ளார்.

அப்போது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பகுதி சிசிடிவி காட்சி ஆய்வு செய்யும் போது இரு சக்கர வாகனத்தை ஒருவர் கொண்டு செல்வது rx 100 அந்த சிசிடிவி காட்சியில் பதிவு ஆகி உள்ளது.

இது குறித்து தலைமை காவலர் செந்தில் புகார் அளித்து உள்ளார். இந்த சிசிடிவி காட்சியை வைத்து செல்வபுரம் போலீசார விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக அந்த பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 443

0

0