என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!
Author: Udayachandran RadhaKrishnan2 May 2025, 2:10 pm
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல்.
உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர் பகுதியில் சாலையில் பாகிஸ்தான் கொடி கிடந்துள்ளது. அப்போது அந்த வழியே பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார் 15 வயது சிறுவன்.
இதையும் படியுங்க: தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!
அவரை தடுத்து நிறுத்திய கும்பல் ஒன்று, சிறுவனின் பெயரை கேட்டு அவர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த என்பதை அறிந்து தாக்கியுள்ளது, மேலும் பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்ல வற்புறுத்தியுள்ளது.
இதையடுத்து அந்த சிறுவன், என்னை விட்விடுங்கள் என கதறியுள்ளார். கையெடுத்து கும்பிட்டு சிறுவன் கெஞ்சிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல குவார்சி பகுதியில் ஜூஸ் கடை வைத்திருந்த உமர் ஹூசைன் என்பவரி கடையை அடையாளம் தெரியாத கும்பல் சூறையாடியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.