RRR படம் ”Gay Love Story” : ஆஸ்கர் விருது பெற்ற பிரபலம் விமர்சனம் – கொதித்தெழுந்த தெலுங்கு ரசிகர்கள்.!

Author: Rajesh
5 July 2022, 12:32 pm

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படம் ‘ஆர்ஆர்ஆர்’.
இப்படம் பற்றி மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரும் ‘Gay Movie’ என விமர்சித்திருந்தார்கள். முனிஷ் பரத்வாஜ் என்ற இயக்குனர் நேற்று ‘ஆர்ஆர்ஆர்’ படம் பற்றி அவரது டுவிட்டரில், “நேற்று இரவு ‘ஆர்ஆர்ஆர்’ என்ற குப்பையை 30 நிமிடங்கள் பார்த்தேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

அதற்கு ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி, ‘Gay Love Story’ என கமெண்ட் செய்திருந்தார். ரசூலின் இந்த மோசமான கமெண்ட் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் தயாரிப்பாளரான ஷோபு இது குறித்து, “நீங்கள் சொல்வதைப் போல ஆர்ஆர்ஆர் படம் ஒரு ‘கே’ காதல் கதை அல்ல, அப்படியே இருந்தாலும் ‘கே காதல் கதை’ என்பது மோசமானதா?, எப்படி நீங்கள் இப்படி சொல்லலாம்.

உங்களது சாதனைகளில் யாரோ ஒருவர் தாழ்ந்து போனதில் மிகுந்த ஏமாற்றம்” என ரசூலை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.அதற்கு பதிலளித்த ரசூல், “முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன், இருந்தாலும் தவறில்லை. ஏற்கெனவே பொது தளத்தில் இப்படி கேலி செய்யப்படுவதைத்தான் நான் எனது நண்பருக்கு மேற்கோள் காட்டினேன். இதில் வளைந்து கொடுக்க எதுவும் இல்லை. இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஷோபு. நான் எந்த குற்றத்தையும் அர்த்தப்படுத்தவில்லை. எனது வாதத்தை இத்துடன் முடிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.ஒரு பொது சமூக வலைத்தளத்தில் ரசூல் பூக்குட்டி ‘ஆர்ஆர்ஆர்’ படம் பற்றி இப்படி கமெண்ட் செய்ததற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!