திண்டுக்கல்லில் உலா வரும் ராட்சத வவ்வால்கள் : அரிய வகை இனத்தை பாதுகாக்க கோரிக்கை!!
24 January 2021, 2:15 pmதிண்டுக்கல் : வேடசந்தூர் அருகே மலைப்பகுதியில் மிகப்பெரிய ராட்சத வவ்வால் வகை உள்ளதால் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா திருக்கூர்ணம் ஊராட்சி மலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் உள்ளது. வவ்வால் என்றால் பறவை போல் பார்த்து இருப்பார்கள் ஆனால் பொதுவாகவே வவ்வால்கள் சிறிய அளவிலேயே இருக்கும்.
இருந்தபோதிலும் இங்குள்ள வவ்வால்கள்(5 அடி மேல் நீளமாக) மிகப்பெரியதாக உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பார்த்து வருகின்றனர். இந்த வவ்வால்கள் பகலில் வராது இரவில் மட்டுமே வரும் பகல் நேரங்களில் அங்குள்ள மரங்களில் தலைகீழாக தொங்கியபடி உறங்கி வருகிறது. எனவே இந்த வகையான அறிய வகை வவ்வால்களை வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0