மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத மீன்.! ஒரு மீன் இவ்வளவு எடையா?
12 August 2020, 3:12 pmதருமபுரி : ஒகேனக்கல் ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய 106 கிலோ கட்லா மீன் சிக்கியது.
கேரளா மாநிலம் வயநாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது மழை அளவு குறைத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி நீர் வரத்து குறைந்து உள்ளதால் மீனவர்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீனவர்கள் ஒகேனக்கல் ஆற்றில் மீன்பிடித்த போது மீனவர்கள் வலையில் 106 கிலோ எடைகொண்ட கட்லா மீன் சிக்கியது. பொதுவாக மீனவர்கள் வலையில் அதிகப்பட்சமாக 40 கிலோ வரை கிடைக்கும் ஆனால் பிடிபட்டது 106 கிலோ கட்லா மீன் என்றதும் மீனவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்தனர். இந்த வீடியோ சமூக வலை தளத்தில் பரவும் வைரல் வீடியோவாக உள்ளது
0
0