சேமியா பாக்கெட்டுகளை ருசி பார்த்த ‘ராட்சத’ சாரைப் பாம்பு : டீத்தூள் வாங்க வந்த இளைஞரின் சாமர்த்தியம்!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 9:37 pm

கள்ளக்குறிச்சி : மளிகை கடையில் நுழைந்த 10 அடி சாரைப்பாம்பு கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடிக்க லாகரமாக பிடித்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது அந்த மளிகை கடையில் இன்று வழக்கம் போல வாடிக்கையாளர் கடைக்கு வந்த பொருட்களை வாங்கி சென்று கொண்டிருந்தனர்.

ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் பிரகாஷ் வழக்கம்போல வியாபாரம் செய்து கொண்டும் பொருட்களை கொடுத்துக் கொண்டும் இருந்தனர்.

அப்போது சேமியா பாக்கெட்டுகளின் அடியில் சுமார் 10 அடி கொண்ட சாரைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் கடைய ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்குமிங்குமாய் கடையை விட்டு வெளியே ஓடி சென்றனர். அப்போது சங்கராபுரம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தெய்வமணி மகன் ரவீந்திரன் மளிகை கடையில் டீ தூள் வாங்க வந்துள்ளார்.

கடையில் பாம்பு உள்ளது என கடையின் ஊழியர்கள் சொல்ல ரவீந்திரன் கடையின் உள்ளே சென்று லாவகமாக பாம்பை பிடித்து வெளியே எடுத்து வந்தார்.

அதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீடியோ மட்டும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் பாம்பை பிடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கடைவீதியின் சாலையில் சென்ற ரவீந்திரனை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?