கனமழையால் வீட்டின் மீது விழுந்த ராட்சத மரம் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சி!!

15 May 2021, 3:16 pm
Tree Broken - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீட்டின் மீது ராட்சத மரம்  சாய்ந்ததில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் டவ் தே புயல் காரணமாக நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் மலை கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று காலையில் பெய்த சாரல் மழையால் சேரன்நகர் பகுதியில் உள்ள ஜெகதீசன் என்பவரின் வீட்டின் மீது மரம் சாய்ந்தது. மரம் சாய்ந்ததில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் வீட்டின் மீது விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தினர்.

Views: - 67

0

0