மஞ்சள், வேப்பிலை… சீரகத்தண்ணீர் குடித்தால் தொற்றை தடுக்கலாம் : ஆயுர்வேத டாக்டர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 11:47 am
Ayurveda Doctor - Updatenews360
Quick Share

கோவை : காரமடை அரசு ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றதில் பல்வேறு கொரோனா விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கோவை காரமடை அருகே தோலம்பாளையத்தில் அரசு கிராமிய ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. தமிழக அரசு இம்மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது.

அதனால் தோலம்பாளையம் ஆயுர்வேத மருந்தகம் சார்பில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தோலம்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் ஜெயா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

ஆயுர்வேத டாக்டர் மேகலை கொரோனா விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பேசியதாவது, மஞ்சள் மற்றும் வேப்பிலையில் இயற்கையிலேயே கிருமியை அழிக்கும் சக்தி உள்ளது.

அதனால் ஒவ்வொரு வீட்டின் வெளியே மஞ்சள் வேப்பிலை கலந்த நீரை வைத்து, அதில், வெளியே சென்று வரும் ஒவ்வொருவரும், கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். சீரகம் உடலை சீராக இயக்கும் ஒரு மூலிகையாகும். வீட்டில் சாதாரணமான தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக சீரகம் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை குடித்தால் வயிற்று தீயை அதிகப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் என்பதால் இக்காலங்களில் வயிறு மந்தமாக இருக்கும். இதனால் வாதம் அதிகரித்து காணப்படும். எனவே சீரகம் போட்டு காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். இரவில் மஞ்சள் கலந்த பாலை குடிக்க வேண்டும்.

காலையில் மூக்கில் நல்லெண்ணெய் விடுவதன் வாயிலாக, மூக்கடைப்பு சீர் செய்யப்படும். நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்தால் கிருமிகள் அழியும். கொரோனா காலத்தில் ஆவி பிடிக்க வேண்டும். மேலும் ஆயுர்வேத மருந்தகத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தச மூலகடுத்ரயாதி கஷாய சூரணம் வியாக்ரியாதி கஷாய சூரணம் இந்து காந்த கஷாய சூரணம் அகஸ்திய ரஸாயனம் கூஷ்மாண்ட ரஸாயனம் ஆகிய மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள் இந்த சூரணங்களை வாங்கிச் சென்று கொரோனாவில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் சீரகத் தண்ணீர் வழங்கப்பட்டது.மஞ்சள் மற்றும் வேப்பிலை இயற்கையிலேயே கிருமிகளை கொல்லும் சக்தி உடையது. எனவே ஒவ்வொரு வீடுகளிலும் வேப்பிலை மஞ்சள் கலந்த தண்ணீரை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என என ஆயுர்வேத டாக்டர் மேகலை தெரிவித்தார்.

Views: - 490

0

0