சிறுமி பலாத்காரம்: நெல்லை வாலிபர் போக்சோவில் கைது

5 July 2021, 10:29 pm
Arrest_UpdateNews360
Quick Share

கன்னியாகுமரி: 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நெல்லை வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ப்ளஸ் டூ வரை படித்துள்ளார். சிறுமியின் தாயார் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அதே ஓட்டலில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் சமாதானபுரத்தை சேர்ந்த இன்பரசு ( 21) என்ற வாலிபரும் வேலை பார்த்துள்ளார். சிறுமி தனது தாயாரை பார்க்க அடிக்கடி ஓட்டல் வருவதுண்டு. அப்பொழுது சிறுமிக்கும் அன்பரசுக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியுடன் திருமணம் செய்வதாக கூறி வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமி, தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் இன்பரசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Views: - 293

0

0