வேறு சாதி பெண் என்பதால் காதலியை கழட்டிவிட்ட காதலன்: விபரீத முடிவு எடுத்த காதலி

Author: Udhayakumar Raman
17 September 2021, 10:13 pm
Quick Share

ஈரோடு: பெருந்துறை அருகே காதலன் கைவிட்டதால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி கலையரசி. இவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முத்துக்குமார் என்பவரும் 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலிக்க தொடங்கிய போது கலையரசியின் சாதி குறித்து அறியாத முத்துக்குமார், சில நாட்களுக்கு முன்பு அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்துள்ளார். இதையடுத்து கலையரசியிடம் இருந்து தொலைபேசியில் பேசுவதையும் சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவருடன் இருந்து முத்துக்குமார் விலக தொடங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த கலையரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவனையில் கூடிய கலையரசியின் உறவினர்கள் முத்துக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய கோரி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.மேலும் முத்துக்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 318

1

1