‘என்ன வாங்கணும் லிஸ்ட் கொடுங்க’ : கடைகளுக்கு சென்று பொருட்களை PURCHASE செய்யும் ஜேக்ஸ்பேரோ!!!

Author: Udayachandran
4 August 2021, 11:21 am
Dog Shopping - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனியில் நாய்‌ ஒன்று‌ வீட்டிற்கு தேவையான பொருட்களை‌ கடைகளுக்கு சென்று வாங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தை சேர்ந்தவர் தாஸ் பெர்னான்டஸ் (வயது 54). தனியார் பள்ளி அசிரியராக பணிபுரியும் தாஸ்பெர்னான்டஸ் வீட்டில் லேபர்டர் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

நான்கு வயதான நாய்க்கு ஜேக் ஸ்பேரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜேக் ஸ்பேரோ நாய் உரிமையாளர் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடைக்கு சென்று வாங்கி வருவது வாடிக்கையாக வைத்துள்ளது.

வீட்டிற்கு தேவையான மளிகைபொருட்கள், காய்கறிகள், பால், சிக்கன், மட்டன் ஆகியவற்றை ஒரு சீட்டில் எழுதி சீட்டையும், பணத்தையும் ஒரு கூடையில் வைத்து நாயிடம் கொடுத்தால் கடைக்கு சென்று சரியான பொருட்கள் மற்றும் மீதிபணத்தையும் வாங்கிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய் ஜேக்ஸ்பேரோ அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே சென்று வருவதால் அப்பகுதி மக்களிடம் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக தினமும் உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்கி வரும் ஜேக்ஸ்பேரோ நாய் உழவர்சந்தை வியாபாரிகள் மற்றும்‌ பொதுமக்களுக்கு நல்ல நண்பனாக மாறிவருகிறது. நாய் ஒன்று வீட்டிற்கு தேவையான‌ பொருட்களை‌ வாங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 247

1

0