கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பாமக தலைவர் ஜி.கே. மணி நிதியுதவி!

26 March 2020, 10:28 pm
GK Mani updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக, தனது ஒரு மாத ஓய்வூதியத்தை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.மணி இன்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பணிகளுக்கு உதவிடும் வகையில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இயன்றவர்கள் நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்படி, கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உதவும் வகையில், எனது மார்ச் மாத ஓய்வூதியத் தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறேன். சட்டப்பேரவைச் செயலகம் வழியாக இந்தத் தொகை முதல்வரின் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.