சிக்கி விட்டான் சீமான் என்று வச்சு செய்யக்கூடாது.. போய் விஜய்கிட்ட கேளுங்க : கொந்தளித்த சீமான்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2023, 2:30 pm
Seeman - Updatenews360
Quick Share

சிக்கி விட்டான் சீமான் என்று வச்சு செய்யக்கூடாது.. போய் விஜய்கிட்ட கேளுங்க : கொந்தளித்த சீமான்!!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், 2024 மற்றும் 2026ம் ஆண்டிற்கான தேர்தல் களம் நாம் தமிழர் கட்சிக்கானது.

நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது.55 ஆண்டு கால கட்சிகளுடன் எங்களை ஒப்பிடாதீர்கள்..எளியவர்கள் ஒருங்கிணைந்து புரட்சியை உருவாக்குவோம் என என்றார்.

தமிழர்களின் வரலாற்றை ஆளுநர் ரவி திரித்து பேசுவதாகவும்
தொடர்ந்து வரலாற்றை இந்திய திராவிட கட்சிகள் மறைத்து வருவதாக சீமான் கண்டித்தார். நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி இருப்பது கேட்டதற்கு மகளிர் மசோதாவை செயலாக்கம் செய்யுமா பாஜக..? வெறும் பேச்சு தான்..அக்கட்சியில் 33% ஒதுக்கீடு உள்ளதா…? இது காதில் தேன் ஊற்றும் வேலை என சீமான் விமர்சித்தார்.

நீட் தேர்விற்கு எதிராக திமுக கையெழுத்து பெறுவது என்பது ஏமாற்றும் வேலை.வெறும் நாடகம் நீட் எதிர் கையெழுத்து வாங்கி விட்டார்கள். கையெழுத்து வாங்கி முடிவதற்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்..பிறகு யாரிடம் கொடுப்பது..?எல்லாம் நாடகம் தான். தேர்தலுக்கான அரசியலை தான் திமுக நடத்துகிறது. மக்களுக்கான அரசியல் இல்லை என்றார்.

நடிகர் விஜய் குறித்து கேட்டதற்கு, நாங்கள் இரண்டு பேரும் இணைந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் இணைந்து இயங்குகின்றோம். அவர் வர வேண்டும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் அவரது கொள்கைகளை சொல்ல வேண்டும், நான் தான் முன்னாடி நிற்கும் அண்ணன். அவர் தான் என்னோடு வருவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும், நான் போய் கேட்க முடியாது, அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவரிடம் போய் கேளுங்கள் சீமானுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்று நான் உங்களிடம் சிக்கி விட்டேன் என்பதற்காக சிக்கி விட்டான் சீமான் என்று வச்சு செய்யக்கூடாது என சீமான் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசு இரண்டுமே மக்களுக்கான அரசு இல்லை…
ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறிக்கொண்டு பக்கத்து மாநிலத்திற்கு தண்ணீர் கொடுப்பதில்லை… சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு தான் எடுக்க வேண்டும்.முதல்வர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்பது தெரியவில்லை.. எந்த காலத்திலும் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது…

தங்களின் வலிமை காண்பிக்கவே பா.ஜ.க அமலாகத்துறை ரெய்டும், திமுக பா.ஜ.கவினரை கைது செய்வதும் நடைபெறுகிறது, வருகின்ற தேர்தலுக்கான இந்த ரெய்டு கைதெல்லாம் நடைபெறுகிறது என்றும்
விளம்பரத்திற்காக பேசும் ஆளுநர் ரவியை தவிர்க்க வேண்டும் என்றும்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதால் அவர் விளம்பரத்திற்காக தினம் தினம் ஏதோ ஒரு கருத்தை கூறி வருகிறார். அவரை நாம் தவிர்க்க வேண்டும்.

ஆளுநர் ரவி அடிப்படையில் RSSகாரர்.. பேசு பொருளாக இருக்க வேண்டும் என தினமும் அரசை விமர்சிக்கிறார்..புதுச்சேரியில் அரசுக்கு கிரண்பேடி ஏராளமான தொல்லைகளை கொடுத்தார்..ஆனால் சகோதரி தமிழிசை நாகரீகமானவர்..அப்படி செய்யவில்லை..ஆளுநர் ரவி RSS காரர் என அடிக்கடி நிருபித்து வருகிறார் என்றும் சீமான் தெரிவித்தார்..

Views: - 325

0

0