வரும் காலங்களில் ஆவினில் ஆட்டுப்பால் விற்பனை: பால்வளத் துறை அமைச்சர் நாசர் தகவல்

Author: Udhayakumar Raman
16 October 2021, 8:49 pm
Quick Share

வருங்காலங்களில் ஆவினில் நாட்டு மாட்டுப்பால் மட்டுமன்றி ஆட்டுப்பாலும் விற்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆவடி – திருப்பதிக்கு சிறப்பு பேருந்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்றால் தன்னிடம் அல்லது ஆவின் புகார் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பாலகங்களில் நாட்டு மாட்டுப்பால் விற்பனை செய்வது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதேநேரம் நாட்டு மாட்டுப்பாலை தனியாக ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவந்து பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும் என்பதால் நாட்டு மாட்டுபால் விலை அதிகமாகும். தற்போது ஆட்டுப்பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 172

0

1