ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. சளைக்காமல் உயரும் வெள்ளி விலை!

Author: Hariharasudhan
16 January 2025, 11:15 am

சென்னையில், இன்று (ஜன.16) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 50 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை சென்று கொண்டிருக்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Today Gold and Silver rate

இதன்படி, இன்று (ஜன.16) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 50 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 390 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் உயர்ந்து 59 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 56 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 64 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் 2 ரூபாய் உயர்ந்து 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…