ரூ.600 வரை உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Author: Hariharasudhan
10 December 2024, 10:29 am

சென்னையில் இன்று (டிச.10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 75 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 205 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: விரதம் மாதம் என அழைக்கப்படும் கார்த்திகை மாதம், தொடர்ச்சியான சுபமுகூர்த்த நாட்களால் தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனிடையே, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், இன்று தங்கம் விலை மீண்டும் நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்து இருக்கிறது.

Silver Price today

இதன்படி, இன்று (டிச.10) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 75 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 205 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 600 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஐட்டம் டான்ஸ்… அல்லு அர்ஜுன் Vs சித்தார்த் : கொந்தளித்த ரசிகர்கள்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?