தங்கம் விலை கடும் சரிவு.. உடனே கிளம்புங்க!

Author: Hariharasudhan
19 December 2024, 10:30 am

சென்னையில் இன்று (டிச.19) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் உள்ள கார்த்திகை மாதம் முடிந்து, மார்கழித் திங்கள் விருட்சமாக விடிந்து உள்ளது. இந்த நிலையில், தங்கம் விலையும் தாறுமாறாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய முன்தினம் சிறிது உயர்ந்து ஷாக் கொடுத்தது. ஆனால், மாறாக நேற்று முதல் தங்கம் குறையத் தொடங்கி உள்ளது.

Silver Price today

இதன்படி, இன்று (டிச.19) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 70 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 520 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: விஜயின் பிரைவேட் போட்டோ எப்படி வெளியே வந்தது? அண்ணாமலை கேள்வி.. பரபரக்கும் அரசியல் களம்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?