திருமாங்கல்யம் செய்ய தங்க நாணயம் வழங்கும் திட்டம் : முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்!!

5 February 2021, 11:53 am
CM Laid Foundation - Updatenews360
Quick Share

சென்னை : திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 726 கோடி ரூபாய் நிதியுதவியில் 95 ஆயிரத்து 739 பயனாளிகளுக்கு திருமாங்கல்யம் செய்ய தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 726 கோடி ரூபாய் நிதியுதவியில் 95 ஆயிரத்து 739 பயனாளிகளுக்கு திருமாங்கல்யம் செய்ய தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மண்டல புற்று நோய் மையம் மற்றும் ரூ.32 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ கட்டடங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்கவியல் புற்றுநோய் பிரிவுக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், சென்னை சைதாப்பேட்டையல் ரூ.28 கோடி மதிப்பில் கட்டப்படுள்ள தமிக தகவல் ஆணையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோவிலின் திருக்குளத்திற்கு மதில் சுவர், நாகூர் தர்கா குளத்தை சுற்றி தடுப்பு சுவர் புதுப்பித்து கட்டும் பணிக்கும் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

Views: - 0

0

0