இனி விலை சரிய வாய்ப்பே இல்லை…. சாமானியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம்!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2025, 10:26 am
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
கடந்த 6-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.75,000-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டியது. ஆனால், அதன்பின் சற்று விலை சரிவை சந்தித்தாலும், கடந்த 21-ம் தேதி முதல் மீண்டும் தங்கத்தின் விலை வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.390 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.3,120 விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
சென்னையில் இன்று (செப்டம்பர் 1, 2025), 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.77,640-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.85 உயர்ந்து, ரூ.9,705-ஆக உள்ளது.
வெள்ளி விலையும் இதேபோல் உயர்ந்து, ஒரு கிராமுக்கு ரூ.2 ஏற்றத்துடன் ரூ.136-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த தொடர் உயர்வு, முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரணப் பிரியர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
