உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை…நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி..!!

Author: Rajesh
1 March 2022, 12:41 pm
Quick Share

சென்னை: உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலியாக் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதும் பின்னர் குறைவதும் என இருந்து வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயர்ந்து ரூ.4,788 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.38,256ல் இருந்து ரூ.38,304 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி ஒரு கிராம் வெள்ளி 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 1067

0

0