‘வேலன்டைன்ஸ் டே’-வ தங்கத்தோடு கொண்டாடலாம் போல… 4வது நாளாக சரிந்து… ரூ.36 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது..!!!

4 February 2021, 11:14 am
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்த நிலையில், தங்கம் விலை இந்த வாரத்தை சரிவுடன் தொடங்கியது. நேற்றைய போலவே 4வது நாளாக தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.35,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், நீண்ட நாட்களுக்கு பிறகு ரூ.36 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. கிராம் தங்கம் ரூ.32 குறைந்து ரூ.4,497க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,264 குறைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 54

0

0