வாரத்தை அமர்க்களமாக தொடங்கிய தங்கம் விலை : வாடிக்கையாளர் கொஞ்சம் குஷி..!!

25 January 2021, 1:06 pm
Gold-Updatenews360
Quick Share

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.10 சரிந்து ரூ.4,645க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 0

0

0