வார இறுதியையும் மகிழ்ச்சியுடன் முடித்து வைத்த தங்கம் விலை : கிராம் தங்கம் ரூ.4,780க்கு விற்பனை

26 September 2020, 4:39 pm
gold - updatenews360
Quick Share

இந்த வாரத்தை இறங்கு முகத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை, வார இறுதியையும் இறங்கு முகத்துடனே முடித்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது

அந்த வகையில்,இந்த வாரம் முழுவதும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்த தங்கம் விலை நிலவரம், இன்றும் குறைந்தே காணப்பட்டுள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.38,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.9 சரிந்து ரூ.4,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 குறைந்து ரூ. 62,400-க்கு வர்த்தகமாகி வருகிறது.

Views: - 7

0

0