மஜாப்பா…. மஜாப்பா…! இன்று மகிழ்ச்சியைக் கூட்டிய தங்கத்தின் விலை..!

21 September 2020, 11:16 am
Gold Rate - Updatenews360
Quick Share

இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது

அந்த வகையில், கடந்த வார இறுதியில் ஏற்றத்துடன் தங்க வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்த வாரத்தை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்துள்ளது தங்கம் விலை. காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.39,472க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.24 சரிந்து ரூ.4,934-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70-க்கு வர்த்தகமாகிறது.