மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த தங்கம் விலை : இன்று ஒரே நாளில் ரூ.104 உயர்வு

1 December 2020, 11:03 am
Gold Rate - Updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.50 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து காணப்படுகிறது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்திற்கு கீழாக சென்றது.

நேற்று சரிவுடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று உயர்வுடன் காணப்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,532-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.36,256-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.64.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 31

0

0