திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு : அமைச்சர் உறுதி!!

5 September 2020, 4:44 pm
Minister Kadamboor -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : தியேட்டர் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சத் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தியோட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. அரசு சில தளர்வுகள் அறிவித்த போதிலும் திரையரங்குகள் திறப்பதற்கான சாத்தியக்கூறு தற்போதைக்கு இல்லை என தெரிவித்தனர். ஆனால் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க சில கட்டுப்பாடுகளுடன் அறிவித்திருந்தது.

தொடர்ந்து கொரோனா தொற்று குறைவானதால், சினிமா படப்பிடிப்பு நடத்த சில கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழக அரசும் அனுமதி கொடுத்தது. ஆனால் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. மேலம் சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது.

இந்த நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து சேவைகள் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பது குறித்து நல்ல முடிவு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், திரைத்துறையினர் நாளை மறுநாள் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறினார்.

Views: - 0

0

0