சிலுவை சுமந்த இயேசு…புனித வெள்ளி அனுசரிப்பு: உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!!

Author: Rajesh
15 April 2022, 9:11 am

சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளே புனித வெள்ளி ஆக அனுசரிக்கப்பட்டுகிறது. அந்த வகையில் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இன்று கிறித்தவ தேவாலயங்களில் நீண்ட நேரம் திருப்பலி, ஆராதனைகள் நடைபெறும்.

கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என பலவிதமாக அனுசரிக்கப்படுகிறது. மார்ச் 2ம் தேதி சாம்பல் புதன் முதல் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் ஒரு சந்தி நோன்பு அனுசரித்து வருகின்றார்கள். இன்று முழு நோன்பு இருந்து சிறப்பு பிரார்தனையில் ஈடுபடுகின்றனர்.

இதையொட்டி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு நிகழ்வு நடந்தது. அப்போது சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடந்தது. ஏராளமான கிறித்தவர்கள் குருத்தோலைகளை சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். புனித வாரத்தின் 2வது நிகழ்வாக, புனித வியாழன் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாள் தமது சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக இது அனுசரிக்கப்பட்டது. பல தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி சென்னை சாந்தோம், பெரம்பூர், பெசன்ட்நகர், எழும்பூர் கதிட்ரல், ராயப்பேட்டை வெஸ்லி உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சாந்தோம், பெசன்ட்நகர், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகளும், சிலுவை பாதையும் நடைபெற்றது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து 3ம் நாள் உயிர்தெழுவதை ஈஸ்டர் தினமாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 17ம் தேதியன்று ஞாயிறு கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?