ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… PROMOTION குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 6:34 pm

ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… PROMOTION குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 67வது தேசிய அளவிலான 17வயது பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி 26ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு மாணவிகளை வாழ்த்தி பேசினார். அப்போது மாணவிகளுக்கு
டி ஷர்ட் மற்றும் வாலிபால் ஆகியவற்றை பரிசளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு பல மாநிலங்கள் தயங்குகின்றன. காரணம் அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகளையும் கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அந்த வகையில் தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் விளையாட்டு துறையில் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தேசிய அளவிலான போட்டிகளை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது இன்று ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

அதில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை படி, பதவி உயர்வு வழங்குவது போல ஒன்றிய அளவில் வழங்கப்பட்டு வருகின்ற துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து அதன்படி பதிவு உயர்வு வழங்கும் ஆணை தமிழக முதல்வரின் ஒத்துழைப்போடு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?