ரிதன்யா வழக்கில் நல்ல செய்தி… மாமியார் சித்ரா தேவிக்கு அதிர்ச்சி கொடுத்த கோர்ட்!!
Author: Udayachandran RadhaKrishnan11 July 2025, 1:10 pm
திருப்பூர் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா என்ற இளம்பெண் திருமணமான 78 நாட்களில் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
திருமணத்திற்கு 100 சவரன் தங்க நகைகள், 70 லட்சம ரூபாய் மதிப்பிலான கார் வரதட்சணையாக வழங்கப்பட்டன. இருப்பினும் 200 சவலன் வேண்டும் என்று கணவர் கவின்குமாரி குடும்பம் ரிதன்யாவை உடல் ரீதியாக மன ரீதியாக அடித்து துன்புறுத்தினர்,.
இதையும் படியுங்க: நீ என்ன ரவுடியா? உன் சட்டையை கழற்றிவிடுவேன்.. காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக நிர்வாகி..!!
இதையடுத்து ஜூன் 28ஆம் தேதி ரிதன்யா காரில் விஷயம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் தந்தைக்கு அனுப்பிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரிதன்யா தந்தை அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் ஆரம்பத்தில் மாமியார் சித்ரா தேவி உடல்நலக்குறைவு காரணம் காட்டி கைது செய்யப்படவில்லை. இருப்பினும் ரிதன்யா தந்தை கொடுத்த மனு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கடந்த ஜூலை 7ஆம் தேதி அவர் ஜாமீன்ோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி விசாரணைக்கு அந்த மனுவை ஏற்கவில்லை. பின்னர் இன்று மீண்டும் அவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் சித்ராதேவியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவுட்டது.
ரிதன்யாவின் தந்தை அளித் இடையீட்டு மனுவால் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ரிதன்யா வழக்கில் நீதி கிடைக்கம் என அவர்களது பெற்றோருக்கு புது நம்பிக்கை கிடைத்துள்ளது.
