இரைச்சலுடன் கூடிய கம்ப்ரஷருக்கு ‘குட்பை’ : கோவை நிறுவனத்தின் கண்டுபிடிப்பு..

1 November 2020, 6:53 pm
LG - Updatenews360
Quick Share

கோவை: அதிக இரைச்சலுடன் இயங்கும் கம்ப்ரசருக்கு மாற்றாக இரைச்சல் இல்லாத கம்ப்ரசரை தயாரித்துள்ளது கோவையை சேர்ந்த எல்.ஜி.எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம்.

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் உலக சந்தைகளில் முன்னணி ஏர் கம்ப்ரஸர் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இந்த சூழலில், இரைச்சலின்றி இயங்கும் ஏர் கம்ப்ரஸரை தயாரித்துள்ளது.

இதுகுறித்து உற்பத்தி பிரிவின் தலைவர் ரோஜர் செர்பெர்க் கூறுகையில், “எங்களது உற்பத்திக்கு புதிய ஏர் கம்ப்ரஷரை தேர்வு செய்யும்போது, நம்பகத்தன்மை, சிக்கனமான அதிக செயல்திறன், சத்தமில்லாத இயக்கம் போன்ற காரணிகளை கொண்டு தேர்வு செய்தோம். உலக அளவில் உள்ள எங்களது தொழிற்சாலையில், 24/7 நேரம் முழுவதும் இயக்கம் கொண்ட, நம்பகத்தன்மை வாய்ந்த செயல் திறன்மிக்க உயர்தர இயக்கம் தரும் கம்பரஸர் தேவைப்பட்டது. எல்ஜியின் இஜி 37 விஎப்டி, எங்களது எதிர்பார்ப்புகளை கடந்த ஏப்ரல் 2020 முதல் நிறைவேற்றி வருகிறது. நீடிக்கப்பட்ட உறுதியுடன், எல்ஜியின் மண்டல அளவிலான பங்குதாரராக, நிபுணத்துவத்தையும், மனதுக்கு நிம்மதியையும் கொடுத்துள்ளது என்றார்.

கிராண்ட்லுன்ட் உற்பத்தி பிரிவின் தலைவர் ரோஜர் செர்பர்க் கூறுகையில், அதிக இரைச்சலுடன் இயங்கிய கம்ப்ரஷருக்கு மாற்றாக, எல்ஜி இஜி சீரிஸ் கம்பரஷரை பொருத்தி, பணியாளர்களின் வேலைத்திறனை அதிகரித்துள்ளோம். குறைந்த எரிபொருளில், அதிக செயல்திறன்மிக்க இந்த கம்ப்ரஸர், கார்பன் படிமத்தையும் கணிசமாக குறைத்துள்ளது. அனைத்துக்கும் மேலாக, சிறந்த முடிவை நாங்கள் மேற்கொண்டுள்ளோம், என்றார்.

Views: - 15

0

0