சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப்பேருந்து: 20 பேர் படுகாயம்..எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட்ட போது விபரீதம்..!!

Author: Rajesh
6 February 2022, 11:27 am

சேலம்: அரசு சொகுசு பேருந்து ஒன்று வாழப்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்த அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணிக்கு வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட டிரைவர் முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்து குறித்து அறிந்த வாழப்பாடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேருந்துக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாங்களுடன் 20 பேரும், லேசான காங்களுடனும் 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்தின் ர் சீனிவாசன் மற்றும் கண்டக்டர் செல்வராஜ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சிசிக்சை பெற்று வருகின்றனர். விபத்தால் வாழப்பாடி சேலம்-சென்னை புறவழிச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!