நடத்தப்படாத பாடத்திற்கு தேர்வு நடத்திய அரசுக் கல்லூரி : கேள்வித்தாளை பதிலாக எழுதிய 2K கிட்ஸ்!!

5 November 2020, 3:41 pm
ariyalur Exam - Updatenews360
Quick Share

அரியலூர் : அரசு கல்லூரியில் நடத்தபடாத பாடத்திற்கு தேர்வு நடத்தியதால் கேள்வியையே பதிலாக எழுதி கல்லூரி முதல்வரிடம் மாணவ மாணவிகள் வழங்கி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு முதுகலை பொருளாதாரத்தில் 25 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா காலத்தால் கல்லூரிகள் திறக்கபடாத நிலையில் சம்பந்தப்பட்ட பாடங்கள் இணைய வழியில் நடத்திட தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் இரண்டாமாண்டு எம் ஏ பொருளாதாரம் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு பொருளாதார துறைத் தலைவர் ஜெயகுமார் முறையாக இணைய வழியில் பாடம் நடத்தவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு கேள்வித்தாளும் இணைய வழியில் அனுப்பப்பட்டுள்ளது.

இதனை பார்த்த மாணவ மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். என்ன செய்வது என்று தெரியாத மாணவ மாணவிகள் கேள்வியையே பதிலாக எழுதி, கல்லூரி முதல்வர் மலர்விழியிடம் மாணவ மாணவிகள் வழங்கினர்.

ஆன்லைன் கல்வி நடத்தாத ஆசிரியரால் மாணவ மாணவிகள் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், இந்த செமஸ்டர் தேர்வை மறுபடியும் நடத்த வேண்டும் எனவும் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 28

0

0