சிசு சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு தமிழக அரசு விருது….!!

26 November 2020, 3:09 pm
awrd - updatenews360
Quick Share

இந்த ஆண்டு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சுமார் 10,000 குழந்தைகள் நல்ல முறையில் பிறந்துள்ளதாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

சிசு சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய திருச்சி மாவட்ட செவிலியர்களுக்கு தமிழக அரசால் விருது வழங்கப்பட்டது. அதனை மருத்துவமனை முதல்வர் வனிதா செவிலியர்களுக்கு வழங்கினார்.இதை தொடர்ந்து திருச்சி அரசு கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்..

திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை அளித்து செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். இந்த ஆண்டு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சுமார் 10,000 குழந்தைகள் நல்ல முறையில் பிறந்துள்ளது. சிசு சிகிச்சையில் திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.

இதில் திருச்சி மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைவருக்கும் விருது வழங்கினர். பிறந்த குழந்தைகளில் 1000 குழந்தைகள் வென்டிலேட்டர் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்களை காப்பாற்றப்பட்டுள்ளது. மேலும் ஒன்றரை கிலோவிற்கு குறைவாக இருந்த 150 குழந்தைகளுக்கு உயிரைக் காப்பாற்றக்கூடிய மருந்து கொடுத்து இறந்து போன குழந்தைகளையும் உயிர் பெறச் செய்தோம்.

மேலும் இந்த ஆண்டு பிறந்த10,000 குழந்தைகளில் 8,000 குழந்தைகள் நல்ல முறையில் சிகிச்சை பெற்று அவர்களின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். எனினும் தற்போது வரை தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலகட்டத்திலும் 325 குழந்தைகள் நல்ல முறையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்தனர். அவர்களில் 10 குழந்தைகளுக்கு மட்டுமே கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினோம். அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தற்போது மூன்று இலக்க எண்ணில் இருந்து ஒற்றை இலக்க எண்ணிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

அதிகமான குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்த வேண்டும். குழந்தை பெறுவதற்கு சரியான வயது 21 முதல் 24 தான். அதற்கு முன்னதாக யாரும் அவசரப்பட வேண்டாம். அது பெண்களின் உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கபொதுச்செயலாளர் ஜெயபாரதி, டாக்டர் நசீர், செந்தில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Views: - 0

0

0