தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு : 18 – 45 வயதினருக்கு செலுத்த நடவடிக்கை!!

12 May 2021, 6:42 pm
Vaccine Stalin - Updatenews360
Quick Share

கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

18 வயது மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லாததால் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கு தடுப்பூசி போடும் பணியில் தமிழக அரசு முனைப்பு காட்டும் என்றும், உலகளாவில் டெண்டர் கோரப்பட்டு குறுகிய காலத்தில் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் கூறினார்.

மத்திய அரசு ஆக்சிஜன் அளவு உயர்த்தினாலம், தமிழகத்திற்கான மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவு குறைவாகவே உள்ளது என்றும், பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Views: - 114

0

0