‘கிசான் திட்ட முறைகேடு’ : பயனாளிகளின் சேர்கையை நிறுத்தி வைத்தது தமிழக அரசு..!

12 September 2020, 11:30 am
Quick Share

தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கையை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் ஊக்கத்தொகை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது சமீபத்தில் அம்பலமானது. இது குறித்து தகவல் அளித்த வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங், சுமார் 110 கோடி ரூபாயிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்பதை உறுதி செய்தார்.

இந்த சூழலில், விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது. இதுவரை, 32 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள தொகை ஓரிரு மாதங்களில் திரும்ப பெறப்படும் என வேலாண்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

30க்கும் மேற்பட்டோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அதிகாரிகள் பணி மாறுதலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கையை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Views: - 9

0

0