17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு அதிரடி உத்தரவு

Author: kavin kumar
29 January 2022, 8:02 pm
TN Sec -Updatenews360
Quick Share

சென்னை: 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ந்தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி 4ந்தேதி கடைசி நாள்.. பிப்ரவரி 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.அதன்தொடர்ச்சியாக 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

  1. சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு) துணை ஆணையர் எம்.குமார் இடமாற்றம் செய்யப்பட்டு தாம்பரம் போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. சென்னை சைபர் பிரிவு-2 எஸ்.பி, சிபிச் சக்ரவர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. சிபிசிஐடி எஸ்.பி, பா.மூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரக தலைமையிடம் மற்றும் நிர்வாகப்பிரிவு துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. அமலாக்கப்பிரிவு குற்றப்புலனாய்வு குழு எஸ்.பி, சுப்புலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டு, தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. சென்னை போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையர் அசோக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி, பெருமாள் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4-வது பட்டாலியன் கமான்டன்ட் உமையாள் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடி காவல் ஆணையரக நிர்வாகம் மற்றும் தலைமையிட பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி, மகேஸ்வரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
  10. சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் தீபா கணிகர் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 8-வது பட்டாலியன் (புதுடில்லி) கமான்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. தமிழ்நாடு சிறப்பு காவல்படை 8-வது பட்டாலியன் (புதுடில்லி) கமான்டன்ட் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை கோவைபுதூர் 4-வது பட்டாலியன் கமான்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  12. சென்னை காவல் ஆணையரக நிர்வாக பிரிவு துணை ஆணையர் மகேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு அடையாறு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையர் பிரதீப் இடமாற்றம் செய்யப்பட்டு சென்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  14. சென்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையர் அருண் பாலகோபாலன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சைபர் கிரைம் பிரிவு-2 எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
  15. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்ரமணியன் சென்னை இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
  16. வேலூர் சப் டிவிஷன் ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் எஸ்.பி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  17. வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Views: - 1377

0

0