1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு தயார் : விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2021, 12:26 pm
All Class School - Updatenews360
Quick Share

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானது.

இதனையடுத்து கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மழலையர் வகுப்புகள் முதல் 8ஆம் வகுப்புக வரை பள்ளிகறை திறக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 276

0

0