2 நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்ப்பு…! அசத்திய அரசு பள்ளிகள்

19 August 2020, 10:53 am
School StoRY - updatenews360-Recovered
Quick Share

சென்னை: 2 நாட்களில் 2½ லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. மாணவர்கள் நலனே முக்கியம், எனவே இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு பற்றி கூற முடியாது என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்து விட்டது.

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கை பள்ளிகளிலும் தொடங்கி இருக்கிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்களுடைய பிள்ளைகளுடன் பள்ளிகளுக்கு சென்றனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2 நாட்களில் மட்டும் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று இருப்பதாக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. வரும் 24ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை ஆரம்பாகும். 

Views: - 0

0

0