பல பேரிடம் லட்சம் லட்சமாக பணம் வாங்கி மோசடி : ₹50 லட்சம் ஏப்பம் விட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது!!

8 July 2021, 5:54 pm
Mosadi - Updatenews360
Quick Share

கோவை : அன்னூரில் 50 லட்சம் மோசடி செய்ததாக ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னே கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம், அதே ஊரில் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் மாலதி என்பவர் தனது மகள் திருமணத்திற்காக 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் மேலும் 10 லட்சம் ரூபாய் பணத்தை மகனின் படிப்பிற்காக வாங்கியுள்ளார். மேலும் விருப்ப ஓய்வு பெற்று, அதன் மூலம் வரும் பணத்தை கொடுப்பேன் என்று மாலதி அவரிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆனால், வட்டியும் கொடுக்காமல் அசலையும் கொடுக்காமல் மாலதி தொடர்ந்து இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாலதி திடீரென தலைமறைவாகியுள்ளார். இதனையறிந்த கார்த்திக் உடனே கோயம்புத்தூர் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதேப் போல் தலைமை ஆசிரியர் மாலதி, பலரிடம் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் அவர்களின் நெருக்கடியால் தலைமறைவானது தெரியவந்தது.

மேலும், பணம் கொடுத்து ஏமாற்றடைந்த வேறு சிலரும் புகார் அளித்துள்ள நிலையில் அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் மாலதியை கோவை குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

Views: - 186

0

0